Tuesday, July 21, 2009

புனே - என் புதிய அலுவலக நகரம்

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே நான் ரசித்தது சில்லென்ற குளிர்ந்த காற்று, எல்லுருக்கும் ஏற்ற பருவ நிலை, அகலமான சாலை மற்றும் அழகிய பெண்கள்.

இனி, என் பார்வையில் புனே:
பருவ நிலை மிகவும் அழகாக (பெங்களூர் போல) அதே சமயம் எப்பொழுது மழை பெய்யும் எப்பொழுது வெய்யில் அடிக்கும் என்று கணிக்க முடியாத ஒரு பருவ நிலை. மொத்தத்தில் சென்னை லிருந்து வரும் எவருக்கும் பிடித்தமான ஒரு weather.

அடுத்தது சட்டென்று கண்ணில் தெரிவது, அழகான அகலமான சாலைகள். பராமரிக்க சற்று சிரம பட்டாலும் மொத்தத்தில் நன்றாகவே வைத்திருக்கிறார்கள். அழகாக அமைந்திருக்கும் பாதசாரிகள் நடை பாதை. சென்னையும் இதை follow செய்தால் நன்றாக இருக்கும்.





மிகவும் அழகான நகரத்தில் கண்டிப்பாக மேல்தட்டு மக்களை (மறுபடியும் பெங்களூர் போல்) அதிகமாக காண முடிகிறது. மேற்கத்திய நகரத்திற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல எல்லோரும் நவீன உடையில் நகரம் முழுவதும் உலா வருகிறார்கள்.

அழகான மால்கள், திரை அரங்குகள், நவீன ரக கட்டிடங்கள், வியாபார நிறுவனங்கள் என ஒரு நவீன நகரத்திற்குரிய எல்லா தகுதிகளோடும் உள்ளது இந்த புனே.

சென்னை, பெங்களூர் போல் "பணம் இருந்தால் பத்தும் பார்க்கலாம் இங்கே!"

அடுத்து, சாப்பாடு...
மருந்துக்கு கூட நம்மூர் சாப்பாடு கிடைக்கவில்லை. சாம்பார் இட்லி எல்லாம் இப்போ அமிர்தமாய் தெரிகிறது. தூங்கி எழுந்ததும் வடையெய் பண்ணில் வைத்து சாப்பிடு என்கிறார்கள். பிளைட் ஏறும் முன் நம்மூர் சாப்பாட்டு நினைப்பை ஏர்போர்ட் லேயே விட்டுவிட்டு வரவும்.

தமிழ் மொழியை கேட்க எப்போதும் ipod இல் நல்ல தமிழ் பாடல்களை மறக்காமல் கொண்டு வரவும். சான்பிரான்சிஸ்கோ சிட்டியிலாவது நிறைய தமிழ் குரல் கேட்க முடிந்தது ஆனால் இங்கே நானே பேசி நானே கேட்க வேண்டி இருக்கிறது. குழுவாக வருவர்களுக்கு பிரச்சினை இல்லை.

பப்ளிக் டிரான்ஸ்போர்ட் ரொம்பவும் குறைவு. சொந்த வண்டி இல்லாதவர்களுக்கு ஆட்டோவே டிரான்ஸ்போர்ட்.

குறைந்த பஸ் சேவையிலும் ஏறிய பொது கவனித்து....
**நடத்துனர் மொழியும், டிக்கெட்டும் ஹிந்தி மற்றும் மராட்டியிலும் தான் இருக்கும். மொழி பெயர்ப்பவர் இருந்தால் நல்லது
**இன்னும் பழைய முறையிலேயே டிக்கெட்டை ஒரு பேடில் வைத்து கிழித்து கொடுக்கிறார்கள்
**விசிலுக்கு பதில் கயிறில் கட்டப்பட்ட மணி (ஏற்கனவே கேரளாவிலும் அமெரிக்காவிலும் பார்த்தது), ஓட்டுனரை அழைக்கும் நல்ல முறை.
**இறங்கும் இடம் புதிதாக இருந்தாலோ, ஹிந்தி கொஞ்சம் கூட தெரியாமல் இருந்தாலோ துணை இல்லாமல் போக கூடாது
**டிக்கெட் விலை ஏறக்குறைய பெங்களூர் போல உள்ளது
**பஸ் மாடல் இன்னும் 1980 போலவே உள்ளது.

டிராபிக் ரூல் என்பது மற்ற இந்திய நகரங்களை போலவே ஒருவரும் மதிப்பில்லை. முறையற்ற வாகன ஓட்டும் முறையால் தேவையற்ற வாகன நெரிசல் ஒவ்வொரு சிக்னலிலும்...
ஹெல்மெட் கட்டாயம் இன்னும் வரவில்லை. ஹெல்மெட் அணிந்து வருபவர்கள் மிக சிலரே.

கம்பெனி களை பொறுத்தவரை இங்கு மென் பொருள் நிறுவனங்கள் அதிகமாக உள்ளது. அதனாலேயே அதிகமான இளம் ஆண் பெண்களை அதிகமாக பார்க்க முடிகிறது. அனேகமாக உலகின் பெரிய மற்றும் முக்கிய நிறுவனங்களின் கிளை இங்கு உள்ளது.

கடைசியாக...
தனி வீடு முறை இங்கு மிகக் குறைவு. அபார்ட்மென்ட் முறையே இங்கு உள்ளது. அதையும் இங்கே சொசைட்டி என்று சொல்கிறார்கள். வாடகையும் அதிகம்.

மொத்தத்தில் இயற்கை எழில் சூழ்ந்த புனே இன்று மெல்ல மெல்ல செயற்கை கலந்த நவீன கலாசாரத்திற்கு மாறிக்கொண்டு வருகிறது. இதுபோல் மாறிய பெங்களூர் நம் கண் முன்னே. பொறுத்திருந்து பாப்போம், வருங்கால புனே எவ்வாறு இருக்கும் என்று.


சரவணன் த










No comments: