இந்த ட்ரிப் அடிக்கும் இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் நண்பர்கள் குழு தீர்மானித்த திட்டம் இந்த வார இறுதியில் (11-ஜூலை) எங்காவது ஊர் சுற்ற கிளம்புவது என்று. முடிவில் தீர்மானித்தது இந்த "சிங்ககாட்".
8 பேர், 4 பைக்குகளில் சனிக்கிழமை (11-ஜூலை-09) காலை 8 மணிக்கு நண்பர்கள் அலுவலகத்திலிருந்து (marvell இந்தியா) கிளம்புவதென்று திட்டம் தீட்டினோம் (மிஷன் சிங்ககாட்). மிஷனில் கலந்துகொண்ட குழு இதோ (பார்க்க படம் கீழே)
11-ஜூலை-09:
வேலை நாட்களிலேயே காலை 7 மணிக்கு எழுவதென்பது இயலாத நிலையில், மிக கஷ்டப்பட்டு 4 அலாரம் வைத்து ஒரு வழியாக எழுந்து கிளம்பி சொன்ன நேரத்திற்கு அலுவலத்தில் இருந்தோம். நண்பர் ஒருவர் வர தாமதமானதால் அங்கிருந்து கிளம்ப மணி 9 ஆனது.
காலையில் பெய்த மழையால் சற்று சிரமத்துடன் வண்டியில் கிளம்பினோம், Almost எல்லோரும் மழையில் நனைந்துகொண்டு...
போகும்போது சரியான வழி தெரியாததால் அங்கெங்கே வழி கேட்டு சென்றோம். காலையில் சாப்பிடாததால் வழியில் சோளம், கொய்யா எல்லாம் சாப்பிட்டு, மெதுவாக மழையில் வண்டியை ஒட்டி சென்றோம்.
போகிற வழியில் பார்த்த மிகவும் அருமையான, மிக பெரிய ஆறு, பெயர் தெரியவில்லை ஆனால் பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாக இருந்தது.
மலை பாதையில் ஏற ஆரம்பித்ததும் சற்றே ஊட்டியும், கொடைக்கனாலும் நினைவுபடுத்தியது இந்த பாதை.
Destination ஐ அடைந்ததும், வண்டியை park செய்துவிட்டு நடக்க ஆரம்பித்தோம். அந்த மலையின் ஆரம்ப வழி சிறியதாக இருந்தாலும், நடப்பதற்கு நன்றாக இருந்தது. நல்ல மழையில், நிறைய மக்களோடு மலை ஏற ஆரம்பித்தோம்.
இதுவரை எதற்கு இங்கு வந்தோம் என்று சொல்லவே இல்லை, அதாவது இந்த மலை உச்சியில், சிவாஜி (ரஜினி சிவாஜி அல்ல ) யின் தளபதி சமாதி இங்கு இருக்கிறது என்றும், சிவாஜி அரசராக இருந்த பொது இங்கே சண்டை practice செய்வாரென்றும் சொன்னார்கள். அதனால் இந்த சமாதியை பார்ப்பதற்கும், மலை உச்சியில் மிக பரந்த கார்டன் பார்க்க நன்றாக இருக்குமென்றும் இங்கே வந்தோம்.
மலை உச்சியை அடைந்ததும், எங்களை வரவேற்றது இனிய தென்றல் காற்று ஏறக்குறைய 100km வேகத்தில். மிக சில்லென்ற காற்று மிகவும் வேகத்தோடு முகத்தில் அடித்த காட்சியை விவரிக்க இயலாது, அனுபவித்தால் தான் தெரியும்.
ஏறக்குறைய 2 மணி நேரம் அந்த இனிமையான சுகத்தை அனுபவித்து, மலையின் ஒரு முனையை அடைந்து அந்த அழகான பள்ளத்தாக்கை பார்த்து ரசித்தோம்.
மிக அழகான பரந்த புல் வெளி, மரங்கள் அடர்ந்த அந்த இடத்தை பார்க்க ஒரு நாள் போதாது. அந்த இயற்கையின் அழகில் மயங்கி லயித்து அங்கிருந்த 4 மணி நேரமும் போனதே தெரியாமல் சுற்றிகொண்டிருந்தோம்.
இங்கே சொல்ல வேண்டிய ஒன்று, எல்லா இடத்திற்கும் போக அழகாக கருங்கல்லால் ஆனா பாதையை செய்து வைத்திருக்கிறார்கள். ஏறக்குறைய எல்லா இடமும் நன்றாக பராமரித்து இருக்கிறார்கள்.
இங்கே பார்பதற்கு, சிவாஜி தளபதியின் சமாதி (அருகே ஒரு பெரியவர் மராட்டி/ஹிந்தி யில் அவர்களது கதை சொல்கிறார்), அழகான பரந்த புல் வெளி, மலை உச்சியில் பள்ளத்தாக்கு view, பள்ளத்தாக்கிலிருந்து கிளம்பி வரும் ஆக்ரோஷமான காற்று (50kg விற்கு கீழே இருப்பவர்கள் மற்றவர்களை இறுக்கி பிடிக்க வேண்டும், இல்லையேல் பறந்தால் யாரும் பொறுப்பல்ல!), பள்ளத்தாக்கை ஒட்டிய பாதை - இவை தான் இங்கே, ஆனால் 100% இயற்கையை ரசிக்கலாம்.
அந்த இனிமையான் சில்லென்ற தூரலில் சூடான தேநீர்.
பள்ளத்தாக்கு விளிம்பில் போட்டோ session.... photograph பிரியர்களுக்கு ஏற்ற இடம்...
பச்சை பசேலென்ற புல்வெளியின் நடுவே நான்...
முடிவில், மாலை 4 மணிக்கு அங்கே இருந்து கிளம்ப மனம் இல்லாமல் கிளம்பினோம்.
மொத்தத்தில் அந்த ஒரு நாள் மிகவும் இனிமையாக, மன நிறைவுடன், நல்ல ஒரு விஷயத்திற்காக செலவழித்த சந்தோஷத்தோடு வீடு வந்து சேர்ந்தோம்.
மீண்டும் ஒரு முறை போக தீர்மானித்து இருக்கிறோம் சங்கத்தில்....
சரவணன். த